பின்வரும் பகுதியைக் கவனமாகப் படித்து, அதன் இறுதியில் தரப்பட்டுள்ள வினாக்களுக்குத் தெளிவாகவும் சரியாகவும் சுருக்கமாகவும் விடை எழுதுக : (12×5=60)
துயரத்தின் வகையில் அச்சம் எந்த இடத்தைப் பெறுகிறதோ அதே இடத்தை மகிழ்ச்சியின் வகையில் உற்சாகம் பெறுகிறது. துன்பம் அல்லது இழப்பைத் தாங்கும் துணிவு தேவைப்படும் இடங்களில் செயல்பட்டு ஈடுபடுவதற்குரிய ஆவலான மனநிலையே உற்சாகம் எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. உற்சாகத்திற்கும் துன்பம் அல்லது இழப்பின் அளவைப் பொறுத்துப் பல தனித்தனி வகைகள் உள்ளன. இலக்கியத் திறனாய்வாளர்கள் அவற்றைப் போர் வீரம், தான வீரம், கருணை வீரம் போன்ற வகைகளாகப் பிரித்துள்ளனர். இவற்றுள் மிகவும் பழமையானது, முக்கியமானது போர் வீரமாகும். இதில் காயம், துன்பம் அல்லது மரணம் கூடப் பொருட்படுத்தப் படுவதில்லை. இந்த வகையான வீரம் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் துணிவும் முயற்சியும் உச்ச நிலையை அடைகின்றன. ஆனால் வெறும் வலியையோ துன்பத்தையோ தாங்கும் துணிவினால் மட்டும் உற்சாகம் வராது. அதனுடன் மகிழ்ச்சியூட்டும் முயற்சியும் அதற்கான ஆவலும் இணைந்திருக்க வேண்டும். உதாரணமாக, பெரிய கொப்புளம் அல்லது கட்டி ஒன்றை மயக்கம் அளிக்காமல் அகற்றிக் கொள்ளத் தயாராக இருப்பது துணிவாகக் கருதப்படலாம். ஆனால் அது உற்சாகமாகக் கருதப்படாது. அதைப் போலவே, கைகளையோ கால்களையோ அசைக்காமல் அமைதியாக இருந்து கடுமையான தாக்குதலைத் தாங்கத் தயாராக இருப்பது துணிவு எனக் கருதப்படும். மேலும் மிகக் கடுமையான தாக்குதல்களையும் எதிர்கொண்டு அசையாமல் நிலைத்திருப்பது பொறுமை மற்றும் விடாமுயற்சி எனக் கருதப்படும். ஆனால் இத்தகைய துணிவும், பொறுமையும் அவற்றைக் கொண்டவர் தமக்குப் பல துன்பங்களை ஏற்படுத்தும் செயலினை மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது மட்டுமே வருவது உற்சாகம் என அழைக்கப்படும். எனவே உற்சாகம் என்பது வெறுமனே துன்பத்தைத் தாங்கும் செயலற்ற துணிவில் இல்லை; மாறாக மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சியிலும் அதற்கான ஆர்வத்திலும் காணப்படுகிறது. துணிவும் விடாமுயற்சியும் உற்சாகத்தின் வழியாக வெளிப்படுகின்றன.
தானம் வழங்குபவர் தமது செல்வத்தைத் தியாகம் செய்யும் துணிவையும் அதனால் ஏற்படும் துன்பங்களையும் சிரமங்களையும் தாங்கும் மன வலிமையைக் கொண்டிருப்பார். ஒருவர் தானம் செய்ததன் காரணமாகத் தமது வாழ்வாதாரத்தில் ஏதாவது குறைபாடு அல்லது சிரமத்தை அனுபவிக்கும் போது மட்டும் அவரது ஈகையும் பெருந்தன்மையும் உண்மையாகப் போற்றப்படுகிறது. அத்தகைய சிரமம் அல்லது இழப்பின் அளவு எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு அவரது தாராள மனப்பான்மையும் அதிகமாகப் போற்றப்படுகிறது. ஆனால் செல்வத்தைத் தியாகம் செய்வதற்கான இந்தத் தைரியமும் முழு மனதுடன் தயார்நிலை மற்றும் மகிழ்ச்சியின் அறிகுறிகளுடன் சேர்ந்தாலன்றி உற்சாகம் வெளிப்படாது.
போருக்கு அப்பாற்பட்டும், உலகில் கடுமையான உடல் வேதனையையும் மரணத்தின் சாத்தியத்தையும் உள்ளடக்கிய பல கடினமான பணிகள் உள்ளன. ஆராய்ச்சிக்காகப் பனியால் மூடப்பட்ட மேகங்களைத் துளைக்கும், கடக்க முடியாத மலைகளில் ஏறுதல், துருவப் பகுதிகளுக்கோ அல்லது சஹாரா பாலைவனத்திற்கோ பயணம் செய்தல், அறியப்படாத அடர்ந்த காடுகளுக்குள் நுழைதல் ஆகியவை வீரத்திற்கும் துணிச்சலுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். மக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடும் மகிழ்ச்சியான ஆர்வமும் உற்சாகமான முனைப்பும் உற்சாகத்தின் வெளிப்பாடாகும்.
(a) உற்சாகத்தில் துணிச்சல் பெறும் இடத்தினைத் தெளிவுபடுத்துக. (12)
(b) விடாமுயற்சி என்றால் என்ன ? (12)
(c) உற்சாகம் எவ்வாறு வெற்றியடைகிறது ? (12)
(d) மகிழ்ச்சியான ஆர்வத்திற்கும் உற்சாகத்திற்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டுக. (12)
(e) தானம் வழங்குபவர் தமது தானச் செயலில் கருத்தில் கொள்ள வேண்டியவை யாவை ? (12)
60 marks · directive: Comprehension
The core of a good answer
The passage argues that enthusiasm (உற்சாகம்) is not mere courage to bear pain or loss: it appears only when that courage and perseverance are joined to joyful, eager effort, whether in war, in giving, or in hard and dangerous enterprises.
An outline written by upsc.help, not an official UPSC answer; every fact checked by a separate review. How we work
What the question asks
Five questions of 12 marks each, all answerable from the passage. Each answer should be a short paragraph in Tamil, in the candidate's own sentences, built on the passage's own distinctions: courage versus enthusiasm, patience and perseverance, the donor's joy, and joyful eagerness in difficult tasks. Nothing from outside the passage is needed.
Answer outline
Introduction
Answer each part separately and briefly, using the passage's key terms (துணிவு, விடாமுயற்சி, மகிழ்ச்சியான ஆர்வம், உற்சாகம்).
(a)
- Courage is a necessary part of enthusiasm but not enough by itself: enthusiasm is the eager state of mind to act where courage to bear suffering or loss is needed ('துன்பம் அல்லது இழப்பைத் தாங்கும் துணிவு தேவைப்படும் இடங்களில் செயல்பட்டு ஈடுபடுவதற்குரிய ஆவலான மனநிலையே உற்சாகம்').
- Courage alone does not produce enthusiasm ('வெறும் வலியையோ துன்பத்தையோ தாங்கும் துணிவினால் மட்டும் உற்சாகம் வராது'); joyful effort and eagerness must be joined to it.
- Example from the passage: having a large boil removed without anaesthesia may be courage but is not enthusiasm.
(b)
- Perseverance is standing firm, without moving, in the face of even very severe blows: 'மிகக் கடுமையான தாக்குதல்களையும் எதிர்கொண்டு அசையாமல் நிலைத்திருப்பது பொறுமை மற்றும் விடாமுயற்சி எனக் கருதப்படும்'.
- On its own it is still not enthusiasm; it becomes part of enthusiasm when the action that causes suffering is carried on with joy and eagerness.
(c)
- Enthusiasm is realised when courage and patience are joined to doing a hard task continuously with joy and eagerness ('மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது மட்டுமே வருவது உற்சாகம்').
- It lies in effort undertaken with joy and in eagerness for it, not in passive endurance ('மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சியிலும் அதற்கான ஆர்வத்திலும் காணப்படுகிறது').
- Courage and perseverance find expression through enthusiasm ('துணிவும் விடாமுயற்சியும் உற்சாகத்தின் வழியாக வெளிப்படுகின்றன').
(d)
- Joyful eagerness is what turns courage into enthusiasm: just as fear holds a place among sorrows, enthusiasm holds the same place among joys.
- In tasks such as climbing impassable mountains, travelling to the polar regions or the Sahara, or entering unknown forests, 'மக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடும் மகிழ்ச்சியான ஆர்வமும் உற்சாகமான முனைப்பும் உற்சாகத்தின் வெளிப்பாடாகும்'.
- So joyful eagerness is the visible form of enthusiasm.
(e)
- The donor needs the courage to sacrifice wealth and the strength of mind to bear the hardship that follows.
- Charity and generosity are truly praised only when giving causes the giver some loss or difficulty in livelihood, and the greater the loss, the more the generosity is praised.
- But this courage shows enthusiasm only with whole-hearted readiness and signs of joy ('முழு மனதுடன் தயார்நிலை மற்றும் மகிழ்ச்சியின் அறிகுறிகளுடன் சேர்ந்தாலன்றி உற்சாகம் வெளிப்படாது').
Conclusion
Keep each answer to the point; the examiner looks for the passage's distinction between passive courage and joyful, active enthusiasm.
Facts to remember
- The passage names three kinds of heroism classified by literary critics: போர் வீரம் (heroism in war), தான வீரம் (heroism in giving) and கருணை வீரம் (heroism in compassion); war heroism is called the oldest and most important.
- Key distinction: துணிவு (courage) and பொறுமை / விடாமுயற்சி (patience, perseverance) become உற்சாகம் (enthusiasm) only when joined with joy and eagerness.